சுடச் சுடச் செய்திகள்

ரோஸ்மா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகக்கூடும்

புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு  செய்யப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விசாரணைக்காக அழைக் கப்பட்ட ரோஸ்மா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தை நேற்று பிற்பகல் 1.45 மணி அளவில் சென்றடைந்தார்.
அங்கு அவரை அதிகாரிகள்  கைது செய்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார். 67 வயது ரோஸ்மா ஆணையத்தின் தலைமையகத் திலிருந்து நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் கிளம்பிச் சென்றதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
சரவாக் மாநில கிராமங் களில் உள்ள பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டத்தில் ரோஸ்மா ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி மலேசியன் இன்சைட் நியூஸ் தெரிவித்தது.
ரோஸ்மா மீது குற்றம் சுமத்த தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடமிருந்து ஊழல் தடுப்பு ஆணையம் அனுமதி பெற்றுவிட்டதாக அறியப்படுகிறது.
சரவாக் சூரியசக்தி திட்டம் வாயிலாக ரோஸ்மா 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 
அவர் மீது இன்று காலை  கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத் தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்த ரோஸ்மா, அவற்றை எதிர்க்க வழக்கு விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon