உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை மாற்றியமைக்க விரும்பும் டிரம்ப்

அமெரிக்க உள்நாட்டுப் பாது காப்புத் துறையில் இருந்து பல உயரதிகாரிகளை நீக்குவது குறித்து அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிசீலித்து வரு வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மெக்சிகோ எல்லைப் பகுதி வழியாக சட்டவிரோதமாக அமெ ரிக்காவினுள் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் டிரம்ப் விரக்தியடைந்ததாகவும் அதையடுத்து திருவாட்டி நீல் சனை பதவி விலகும்படி அவர் அறிவுறுத்தியதாகவும் சொல்லப் பட்டது.
இதற்கிடையே, உளவு அமைப் பின் இயக்குநர் ரேண்டோல்ஃப் ஆலெஸும் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சர் கிளேர் கிரேடியும் பதவிநீக்கம் செய்யப்படுவார் அல்லது வேறு பொறுப்பில் அமர்த்தப்படுவார் எனத் தெரிகிறது. சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்பு ஆணையர் கெவின் மெக்கலீனானை புதிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்க டிரம்ப் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கக் குடியுரிமை, குடிநுழைவுச் சேவைகள் துறை யின் தலைவர் எல் ஃபிரான்சிஸ் சிஸ்னா, தலைமை ஆலோசகர் ஜான் மிட்னிக் ஆகியோரும் பதவி விலகக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சட்டவிரோதக் குடியேற்றத் தைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற டிரம்ப்பின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தபோதும் உள் நாட்டுப் பாதுகாப்புத் துறையை மாற்றியமைக்கும் அவரது நடவ டிக்கை குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த டிரம்ப் ஏதேனும் திட்டம் வைத்துள்ளாரா அல்லது குடிநுழைவுத் துறையில் உயரதி காரிகளுக்கான காலியிடங்களை மேலும் அதிகரிக்க விரும்புகிறாரா என்று அவர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!