நுரையீரல் நோய்த்தொற்று - மருத்துவமனையில் டலாய் லாமா

நுரையீரல் நோய்த்தொற்று - மருத்துவமனையில் டலாய் லாமா

1 mins read
77263d3e-7643-4f41-8384-48751d7045ad
-

திபெத்தின் ஆன்மிகத் தலைவரான டலாய் லாமா நுரையீரல் நோய்த்தொற்றின் காரணமாக புதுடெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த 83 வயது பெளத்தத் துறவியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவரது உதவியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

1959ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிரான திபெத்தின் புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டலாய் லாமா தமது சொந்த நாட்டைவிட்டு இந்தியாவுக்குத் தப்பியோடினார். வட இந்தியாவிலுள்ள தரம்சாலா நகரில் அவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் இதுநாள்வரை வசித்து வருகிறார்.

இந்தியாவில் தற்போது வாழும் 100,000 கணக்கான திபெத்தியர்கள், தங்களது உரிமைகளுக்கான போராட்டம் டலாய் லாமாவுடன் நின்றுவிடும் என அஞ்சுகின்றனர்.

தாம் அமர்ந்திருக்கும் பீடத்திற்கான அடுத்த தலைவரை சீனா நியமிக்க முடியாது என்றும் தமக்கு அடுத்து வருபவர் இந்தியாவில் பிறக்கலாம் என்றும் டலாய் லாமா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கடந்த மாதம் தெரிவித்தார்.