பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

1 mins read
734dbe1f-dc64-431f-b9e5-fb98e4a63d20
-

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றியத் தலைவர்கள் சம்மதித்துள்ளனர்.'பிரெக்சிட்' எனப்படும் அந்த வெளியேற்றத்திற்கான புதிய காலக்கெடு இவ்வாண்டின் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதம் 2020 வரைக்குள் நீடிக்கலாம். ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் நிகழ வேண்டிய வெளியேற்றத்தைத் தள்ளிப்போட ஒப்புதல் அளிக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களிடம் கேட்டிருந்தார்.

பிரான்சின் அதிபர் இமானுவெல் மக்ரோனும் ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மர்க்கலும் திருமதி மேயுடன் என்னென்ன கலந்து பேசினர் என்பது வெளியிடப்படவில்லை. ஆயினும், சில நிபந்தனையின் அடிப்படையில் திருமதி மேக்கும் காலக்கெடு நீட்டிப்பு வழக்கப்பட்டதாக புதன்கிழமை அவசரமாக நடந்தேறிய ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலைக்கூட்டத்தில் நடந்து முடிந்த விவாதங்களின் குறிப்புகள் தெரிவித்தன.

'பிரெக்சிட்' தொடர்பான எந்த ஒப்பந்தத்திற்கும் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைங்காத நிலையில் 'பிரெக்சிட்' நிகழாமல் போகலாம் என அஞ்சுவதாகத் திருமதி மே கூறினார்.