இஸ்ரேலிய தேர்தலில் நெட்டன்யாகு வெற்றி

இஸ்ரேலிய தேர்தலில் நெட்டன்யாகு வெற்றி

1 mins read
7f63567e-edea-49a5-942e-482cd3870baa
-

இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாகு தமது நாட்டின் பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்திருப்பதாக ஆக அண்மை வாக்குக் கணக்கெடுப்பு ஒன்று காட்டுகிறது. வாக்குகளில் 97 விழுக்காடு எண்ணப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் 120 இடங்களில் 65ஐ திரு நெட்டன்யாகு வென்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியை ஐந்தாம் முறையாக ஏற்கவுள்ள திரு நெட்டன்யாகுவை ஊழல் குற்றச்சாட்டுகள் பாதித்ததாகத் தெரியவில்லை. தம்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று மூன்று ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் அவர் தொடர்ந்து கூறினார். 2017ஆம் ஆண்டில் ஜெரூசலத்தை இஸ்ரேலிய தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தாம் நெருக்கமாக இருப்பதை திரு நெட்டன்யாகு அடிக்கடிச் சுட்டிக்காட்டுவது வழக்கம்.

பாலஸ்தீனக் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியிருப்புகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாக திரு நெட்டன்யாகு உறுதியளித்தது அவரது வெற்றிக்குப் பெரும் பங்களித்ததாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.