நஜிப்பின் மூன்று மேல்முறையீடுகள் நிராகரிப்பு

நஜிப்பின் மூன்று மேல்முறையீடுகள் நிராகரிப்பு

2 mins read
814d27a0-3473-4bb6-b22a-df30788b837c
-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தாக்கல் செய்த மூன்று மேல்முறையீட்டு மனுக் களையும் மலேசிய கூட்டரசு நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட் டது. 'த மலேசியன் இன்சைட்' இணையத்தளம் இதனைத் தெரி வித்தது. மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் முன் னைய துணை நிறுவனம் எஸ்ஆர்சி என்பது குறிப்பிடத் தக்கது. தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலாஞ்சும் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திரு நஜிப்பின் மேல்முறையீடு களை நிராகரித்த அதேவேளை அரசு சார்பில் வாதாட சுலைமான் அப்துல்லா நியமிக்கப்பட்டதற் கான கடிதத்தை பிரதிவாதியிடம் காட்டவேண்டும் என்னும் நீதி மன்ற ஆணைக்கு எதிராக தலைமைச் சட்ட அதிகாரி டாமி தாமஸ் எழுப்பிய மேல்முறை யீட்டுக்கு அனுமதி வழங்கியது. வழக்கு விசாரணைக்கு இடையிலான நஜிப்பின் மூன்று மேல்முறையீடுகளில் முதன்மை யானது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட விசா ரணைப் பத்திரங்களையும் சான்று களையும் கேட்டுப் பெறுவது. இரண்டாவது, வழக்கை அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்று வதற்கான சான்றிதழை தலை மைச் சட்ட அதிகாரி திரும்பப் பெற்றது குறித்து கேள்வி எழுப்பு வது. நஜிப்பின் குற்ற வழக்குகளை பொதுவெளியிலும் ஊடகங் களிலும் விவாதிப்பதற்கு எதி ராக ஆணை பெறுவது மூன்றா வது மேல்முறையீடு. 1எம்டிபி வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் புதன் கிழமை தொடங்கியபோது தம் மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச் சாட்டுகளையும் நஜிப் மறுத்தார். நிலக்கரி விநியோக வர்த்த கத்துக்காக அமைக்கப்பட்ட எஸ் ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவ னத்துக்கு 4 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்க அரசாங் கத்தின் சார்பில் உத்தரவாதம் தருவதற் காக 42 மில்லியன் ரிங்கிட் (S$13.8 மில்லியன்) தொகையைப் பெற்றதாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1எம்டிபியிடமிருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப் படும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.35 பில்லியன்) பணத் தின் ஒரு பகுதி இது என்றும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் தம் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று நஜிப் தொடர்ந்து தெரிவித்ததோடு குற்றச்சாட்டுகளை மறுத்து வந் துள்ளார். எஸ்ஆர்சி நிதி முறைகேடு தொடர்பான விசாரணை இம் மாதம் 3ஆம் தேதி தொடங்கியது. பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே எப்ரல் 3ஆம் தேதி தான் திரு நஜிப் மலேசியாவின் ஆறா வது பிரதமராகப் பொறுப்பேற்றார். வழக்கு விசாரணை மீண்டும் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தங்களுக்கே வெற்றி கிட்டும் என்று நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் முகம்மது ஷாபி அப்துல்லா தெரிவித்து வருகிறார். இருப்பினும் எஸ்ஆர்சி நிறுவனத்துக்கு 4 பில்லியன் ரிங்கிட் பெற்றுத் தந்ததற்கு நஜிப்பிற்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதை தம்மால் நிரூபிக்க இயலும் என்று தலைமைச் சட்ட அதிகாரி டாமி குறிப்பிட்டுள்ளார்.