ஜப்பானிய புதிய தூதரக கட்டட  அனுமதியை ரத்து செய்தது கொரியா

சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் ஜப்பானின் புதிய தூதரகக் கட்டடம் கட்டுவதற்காக ஏற்கெனவே தென்கொரிய அரசு அளித்திருந்த அனுமதியை ரத்துச் செய்வதாக நேற்று அறிவித்துள்ளது. பழைய தூதரக கட்டடம் சில ஆண்டுக ளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அந்த அலுவலகம் அருகேயுள்ள உயர்மாடிக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. 
2015ல் ஜப்பான் தூதரகத்தின் புதிய ஆறு மாடிக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை சோல் நகரம் வழங்கியது. ஆனால் ஜப்பானோ தூதரகக் கட்டடப் பணிகளைத் தொடங்குவதில் சுணக்கம் காட்டியது. தென்கொரிய சட்டப்படி கட்டடம் கட்ட அனுமதி பெற்று ஓராண்டுக்குள் கட்டடப் பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் ஜப்பானோ கட்டடப் பணிகளைத் தொடங்குவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வந்தது. அதனையடுத்து சோல் அந்த அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தது. 
இதுகுறித்து தென்கொரியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் கூறுகையில்,  “கடந்த பிப்ரவரி மாதம் ஜப்பானிய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது கட்டுமான அனுமதி ரத்துசெய்யப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்,” என்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon