சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்

மணிலா: பல நாடுகள் சொந்தம் கொண்டாடும் தென்சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்கா, தனது போர்க்கப்பலை அனுப்பி வைத்துள் ளது.
அப்பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ள அந்தக் கப்பல் போர் விமானங்களைத் தாங்கி அப்பகுதிக்குச் சென்றுள் ளது. அமெரிக்காவின் இந்தச் செயல் சீனாவுக்கு சினத்தை மூட்டும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
எஃப்-35 போர் விமானங்களைக் கொண்டு இம் மாதம் பிலிப்பீன்ஸுடன் இணைந்து சர்ச்சைக்குரிய அந்தக் கடல் பகுதியில் அமெரிக்கா போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக சீனாவின் கட்டுப் பாட்டில் உள்ள கடல் பகுதிக்கு அருகே இந்தப் பயிற்சி இடம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே தென்சீனக் கடலில் சீனா, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடல் பகுதியை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் ராணுவ ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்ட்டே பதவியேற்றது முதல் அந்நாடு ஆரம்பத்தில் சீனாவின் பக்கம் சாய்ந்திருந்தது.
இருப்பினும் அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்த பிலிப் பீன்ஸ் அண்மையில் நாட்டம் கொண்டது.
பிலிப்பீன்ஸுக்குச் சொந்தமான கடற்பகுதிகளைச் சீனா உரிமை கொண்டாடி கைப்பற்ற முற்பட்டால் பீலிப்பீன்சுக்கு உதவ அமெரிக்கா முன்வருமா என டுட்டர்டே கேட் டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ, பிலிப்பீன்ஸின் கப்பல் களையோ அல்லது விமானங்க ளையோ சீனா தாக்கினால், அமெரிக்காவுக்கும் பிலிப்பீன் ஸுக்கும் இடையேயான தற்காப்பு ஒப்பந்தப்படி பிலிப்பீன்ஸுக்கு அமெரிக்கா உதவக் கடமைப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இருநாடுகளும் இணைந்து கடற்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக இரு நாடுகளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!