சுடச் சுடச் செய்திகள்

மகாதீர்: அரசு,  மன்னர்கள்  இடையே மோதல்  ஏற்படுத்த   முயற்சி 

ஜோகூர் மாநிலத்தில் ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற அரசாங்கத்திற்கு முதலமைச்சரைத் தேர்வு செய்யும் உரிமை உள்ளது. ஜோகூர் மலேசியாவுக்கு வெளியே உள்ள ஒரு மாநிலம் அல்ல என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தரப்புகள் மாநில விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் அறிக்கை வெளியிட்டதற்குப் பதிலடி தரும் விதமாக டாக்டர் மகாதீரின் கருத்துரைத்துள்ளார்.
“ஜோகூர் வெளிநாடு என்றால் அந்நாட்டு விவகாரங் களில் நான் தலையிடமாட்டேன். அது இந்த நாட்டைச் சேர்ந்தது என நம்புகிறேன்,” என்று நேற்று வாகன கண்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்த டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜோகூர் முதல்வர் ஒஸ்மான் சப்பியான் பதவி விலகியதைத் தொடர்ந்து அடுத்த முதல்வரை நியமிப்பதில் ஜோகூர் சுல்தா னுக்கு முழு உரிமை உள்ளதா என்பது குறித்த கடுமையான விவாதம் நிலவி வருகிறது.
இந்நிலையில், அரச குடும்பத் திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்த நினைப்பவர்கள் தோல்வியுறுவர் என்று டாக்டர் மகாதீர் எச்சரித்தார்.
“அரசாங்கம் மீது மன்னர் களுக்கு அதிருப்தி ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெற முடியாது. ஏனெனில் இந்த அரசாங்கம் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
“ஜனநாயகத்தைக் கைவிட்டு ஊழல்வாதிகள் நிறைந்த அரசை விரும்பினால் அல்லது ஒருவர் கையில் அனைத்து அதிகாரத்தை யும் ஒப்படைக்க விரும்பினாலொழிய அவர்களால் அரசாங்கத்தை நீக்க முடியாது,” என்றார் டாக்டர் மகாதீர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon