பேங்காக் கடைத்தொகுதியில் பெருந்தீ; இருவர் மரணம், இருபது பேர் காயம்

பேங்காக் கடைத்தொகுதியில் பெருந்தீ; இருவர் மரணம், இருபது பேர் காயம்

1 mins read

பேங்காக்: பேங்காக்கின் 'சென்ட்ரல் வேர்ல்ட் ஹோட்டலில்' அமைந்துள்ள 'சென்ட்ரல் கிரான்ட் கடைத் தொகுதியில் தீ மூண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதை இரவான் மருத்துவ மையம் நேற்று உறுதிசெய்தது. அத்துடன் சம் பவத்தில் 20 பேர் காயமடைந்ததாக வும் கூறப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் அளவுக்கு அதிகமாகப் புகையைச் சுவாசித்த தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் அறுவர் வீடு திரும்பியுள்ளனர். ரட்சப்ரசோங் சாலைச்சந்திப்பில் அமைந்துள்ள அந்த ஹோட்டலில் உயிரிழந்தவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விடத் தின் ஊழியரான அவர், கட்டடத் தின் நான்காவது மாடி சன்னலி லிருந்து குதித்ததாக கூறப்பட்டது. உயிரிழந்த மற்றொருவர் 50 வயது அர்த்திட் கம்சாய். சம்பவத்தின் போது தீ எச்சரிக்கைகள் ஒலிக்க வில்லை என்றும் கடைத்தொகுதி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் எச்சரிக்கையை ஒலிக்கச் செய்தது என்றும் 'சென்ட்ரல் பட்டாணா' நிறுவனம் தெரிவித்தது. ஹோட்டலின் எட்டாவது மாடி யில் ஆவணங்களை வைப்பதற் கான அறையிலிருந்து புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறியதைத் தொலைவிலிருந்தே பார்க்க முடிந் ததாகவும் அதனால் பீதியடைந்த பலர் தங்கள் வாகனங்களை கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளி யேற்ற ஓடியதாகவும் கூறப்பட்டது. தீ விரைவில் கட்டுப்படுத்தப் பட்டபோதும் போக்குவரத்து நெரி சலால் போலிசாரும் தீயணைப் பாளர்களும் தீயணைப்பு வண்டி களும் சம்பவ இடத்தை அடைய மிகச் சிரமமாக இருந்ததாக தெரி விக்கப்பட்டது.