லண்டன்: விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞை லண்டன் நகர போலிசார் கைது செய்துள்ளனர். அசாஞ்சுக்கு அளித்திருந்த அரசதந்திர ரீதியான அடைக்கலத்தை எக் குவடோர் குடியரசு ரத்து செய்ய முடிவெடுத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர். கைது செய்வதற்குச் சில மாதங்கள் முன்னர் அசாஞ்சுக் கான அடைக்கலம் ரத்து செய்யப் பட்டதாக எக்குவடோரின் அதிபர் லெனின் மொரெனோ அறிவித் தார். அனைத்துலக விதிமுறை களை அசாஞ் தொடர்ந்து மீறிய தால் இந்த முடிவை எக்குவடோர் அரசாங்கம் எடுத்ததாக அவர் கூறினார். ஏழு ஆண்டுகளுக்கு முன் னர், தன் மீது சுவீடன் தொடர்ந்துள்ள பாலியல் பலாத் கார குற்றச்சாட்டிலிருந்து தப் பிக்க அசாஞ் பிரிட்டனில் இருக் கும் எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அந்தக் குற்றச் சாட்டு பிறகு கைவிடப்பட்டது. குற்றச்சாட்டு தன் மீது சுமத் தப்பட்டிருந்தபோது நீதிமன்றத் தில் சரணடையத் தவறியதற்காக அசாஞ் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித் தனர். இந்தக் குற்றச்சாட்டு தனக்கு எதிரான சதி என்றும் 'விக்கிலீக்ஸ்' பற்றிய விசா ரணையை மேற்கொள்ள அமெரிக்கா விரும்பியதே இதற்குக் காரணம் என்று அசாஞ் கூறுகிறார். "இப்போது ஜூலியன் அசாஞ் போலிஸ் தடுப்புக் காவலில் இருக் கிறார். பிரிட்டனில் அவருக்கு உகந்த சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று உள்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். "ஒத்துழைப்பு நல்கிய எக் குவடோருக்கும் சிறந்த முறையில் நடந்துகொண்ட பிரிட்டிஷ் போலிசாருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். எவரும் சட்டத் தைவிட உயர்வானவர்கள் அல் லர்," என்றார் திரு ஜாவிட். மத்திய லண்டன் போலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திரு அசாஞ் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விரைவில் முன்னிலையாக வேண் டும் என்று போலிசாரின் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் கைது
2 mins read
கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ், போலிஸ் வண்டியில் நீதிமன்றத்திற்குச் செல்லும் காட்சி. படம்: ராய்ட்டர்ஸ் -

