பாரிஸ்: வெறும் ஓவியங்கள் வழி கற்பனையாகச் சித்திரிக்கப்பட்டு வந்த 'பிளாக் ஹோல்' எனப்படும் கருந்துளை வரலாற்றிலேயே முதல்முறையாக புகைப்பட வடி வில் கிட்டியுள்ளதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். கரும்புள்ளியைச் சூழ்ந்துள்ள ஆரஞ்சு நிற ஒளிவட்டத்தை ஓவியர்கள் கடந்த 30 ஆண்டு களாக தங்கள் படைப்புகளில் வரைந்து வந்தாலும் இப்போது தான் கருந்துளையின் உண்மை வடிவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் கிட்டத்தட்ட எட்டு தொலைநோக்கிகளின் உதவி யுடன் கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச் சியாளர்களால் 'மான்ஸ்டர்' என அழைக்கப்படும் இந்தக் கருந் துளை, கற்பனை செய்து பார்க்க முடியாத தொலைவில் உள்ளது. இது சூரியனை விட கிட்டத் தட்ட 650 கோடி மடங்கு பெரியது. 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக கருந் துளையைப் புகைப்படம் எடுத் திருக்கின்றனர்.
மனிதனுக்குக் கிட்டியுள்ள முதல் 'கருந்துளை' புகைப்படம்
1 mins read
'பிளாக் ஹோல்' புகைப்படம் பதிவு செய்யப்பட்டதன் வழி வரலாறு படைக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

