கோலாலம்பூர்: 'ஃபெல்டா' வெள்ளை அறிக்கை கசிவு தொடர் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது நாடாளுமன்ற உரிமைகள் குழு விசாரணை நடத் தும். நாடாளுமன்றத்திற்கு நஜிப் வராத நிலையில், இரண்டு மணிநேரம் நீடித்த சூடான விவாதங்களுக்குப் பின் அவருக்கு எதிரான இத்தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. விசாரணையோ தண் டனை விதிப்போ செய்யப்படுவதற்கு முன் நஜிப் தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தமது தற்காப்பு வாதத்தை முன்வைக்க இது அனுமதிக்கும் என்று பிரதமர் அலுவலகத்தின் அமைச்சர் தெரி வித்தார். நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்குப் பின்னரே வெளி யிடப்படவிருந்த 'ஃபெல்டா' வெள்ளை அறிக்கையை அதற்கு முன்தினமே நஜிப் வெளியிட்டதன் தொடர்பில் அவர் சட்டத்தை மீறிய தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அறிக்கையின் பகுதிகளைப் புகைப்படம் எடுத்து அவற்றைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், நஜிப். இதன் தொடர்பில் அவர் மூன்று மாதங்களுக்குத் தற் காலிகப் பதவி நீக்கம் செய்யப் படுவார் எனத் தொடக்கத்தில் கூறப்பட்டது. இம்முடிவு பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டு நஜிப் நாடாளுமன்ற உரிமைகள் குழுவால் விசாரிக்கப் படுவார் என்ற முடிவு எடுக்கப் பட்டது. இதன் தொடர்பில் நாடாளு மன்ற விவாதங்களின்போது பிர தமர் அலுவலக அமைச்சர் குறிப் பிட்டிருந்த நாடாளுமன்ற விவாதப் பட்டியலிலிருந்து நஜிப்பின் மூன்று மாத பணிநீக்கப் பிரச்சினை நீக் கப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மைல் சப்ரி யாகுப் சுட்டினார். அத்துடன் நஜிப்புக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். 'ஃபெல்டா' தொடர்பிலான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படு வதற்கு முதல் நாளே அது நாடாளு மன்ற இணையப்பக்கத்தில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டதை அவர் சுட்டினார். அதனால் நஜிப் எந்தத் தகவல் கசிவுக்கும் காரணமில்லை என்று அவர் கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் நஜிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய பிர தமர் முகம்மது மகாதீர் செய்தி யாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தடையாணையை மீறியதால் நஜிப்பிடம் விசாரணை
2 mins read

