உலகின் ஆகச் சக்திவாய்ந்த செயல்பாட்டு உந்துகணையான (operational rocket) 'ஸ்பேஸ்-எக்ஸ் ஃபெல்கன் ஹெவி' தனது முதல் வர்த்தகப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து அந்த உந்துகணை புறப்பட்டது.
23 மாடி உயரமான 'ஹெவி' என்ற அந்த உந்துகணை, 2018ஆம் ஆண்டில் முதன்முதலாகச் சோதிக்கப்பட்டது.=
உந்துகணை பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது.
பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்கின் 'ஸ்பேஸ்-எக்ஸ்' விண்வெளி நிறுவனம் இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது. 2002ஆம் ஆண்டில் திரு மஸ்க் அந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

