தண்ணீருக்குத் தட்டுப்பாடு, கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடு

தண்ணீருக்குத் தட்டுப்பாடு, கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடு

1 mins read
5407784e-c622-4b9e-a868-7daabac0b04c
-

தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசி புத்தாண்டை வரவேற்கும் வழக்கம் தாய்லாந்தில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் தாய்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாகத் தண்ணீரின் விரயத்தைக் குறைக்கும்படி அதிகாரிகளும் இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எல் நினோ பருவநிலை மாறுதலால் தாய்லாந்தில் நிலவும் வறண்ட பருவநிலை வழக்கத்தைவிட மேலும் கடுமையாக உள்ளது என்று அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் ஆகப்பெரிய நீர்த்தேக்கங்களில் பலவற்றின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

வறட்சி மிகவும் கடுமையாக இருப்பதாகத் தாய்லாந்தின் வர்த்தகத் துறையைச் சேர்ந்த திரு பிம்சனோக் வொங்கொர்பொன் தெரிவித்தார்.

கிராமங்களில் மக்களின் நிலைமை கடுமையாக இருந்தபோதும் பேங்காக் நகரம் புத்தாண்டுக்காகக் களைக் கட்டியுள்ளது. சொங்க்ரான் என அழைக்கப்படும் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டம், சனிக்கிழமை முதல் அடுத்த திங்கட்கிழமை வரை நடைபெறும்.