மலேசிய இந்திய கணக்குப்புலிக்குத் திறன்போட்டியில் அங்கீகாரம்

மலேசிய இந்திய கணக்குப்புலிக்குத் திறன்போட்டியில் அங்கீகாரம்

1 mins read
748684b3-0785-409a-88c6-f866d1527e6f
-

'ஏ‌ஷியா'ஸ் காட் டேலன்ட்' திறன்போட்டி நிகழ்ச்சியில் மலேசிய இந்திய இளைஞரான யாஷ்வின் சரவணன் இரண்டாம் நிலையை அடைந்தார்.

15 வயது யாஷ்வின், போட்டியில் தனது உன்னதக் கணக்குத் திறமையால் பார்வையாளர்களை மலைக்க வைத்தார்.

போட்டியின் இறுதிச் சுற்று சிங்கப்பூரிலுள்ள மரினா பே சேண்ட்ஸில் ஏப்ரல் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நிகழ்ந்தது.

"இந்த நிலைக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கலை நிகழ்ச்சியில் கணக்கிற்கு இடம் ஏது என்று மக்கள் எண்ணலாம். எனவே, எனது திறமையை மக்கள் ரசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன்," என்றார் யாஷ்வின்.

தைவானைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரர் இந்தப் போட்டியின் வெற்றியாளர். யாஷ்வினுக்கு அடுத்த நிலையை பிலிப்பீன்ஸைச் சேர்ந்த நடன ஜோடி அடைந்தனர்.