பெட்ரோனாஸ் எண்ணெய் நிறுவனத்தில் தீ, வெடிப்பு

ஜோகூர் பாரு: மலேசியாவின் கச்சா எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் ஜோகூரின் பெங்க ராங் ஒருங்கிணைந்த வளாகத்தில் நிறுவி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலை 1.25 மணிக்கு நிகழ்ந்த தீ, வெடிப்பில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
தனது அவசரகால, தீ தடுப்புக் குழு உடனடியாகச் செயல்பட்டு 30 நிமிடங்களுக்குள் தீயை அணைத்ததாக பெட்ரோனாஸ் நிறுவனம் குறிப்பிட்டது.
நிலைமை கட்டுக்குள் இருப்ப தாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்குத் தகவல் அளித்திருப்ப தாகவும் கூறிய அந்த நிறுவனம், விசாரணை தொடர்வதாகச் சொன்னது.
சம்பவ இடத்தில் பாதுகாவல் அதிகாரிகளாக இருந்த 28, 30 வயதுடைய இரு உள்ளூர் ஆட வர்கள் காயமடைந்ததாக 'தி ஸ்டார்' செய்தி வெளியிட்டது.
பெங்கராங்குக்கு அருகில் உள்ள கம்போங் லெப்பாவில் 10க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.
வளாகத்துக்குள் இருந்த ஒரு இடத்தில் சம்பவம் நிகழ்ந்ததை கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் அதிகாரி அஷ்மோன் பாஜா உறுதி செய்தார். ஐந்து தீயணைப்பு வண்டிகள், 30 தீயணைப்பாளர்கள் கொண்ட குழு தீயை அணைத்த தாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீக்கான காரணம் குறித்து ஆராய கூட்டு விசாரணை நடை பெறுவதாகவும் அவர் சொன்னார்.
இந்த வெடிப்புச் சம்பவத்தின் தொடர்பில் காற்றின் தரம், சூழல் ஆகியவற்றை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரி யம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று மதியவாக்கில் தெரிவித்தது.
காற்றின் தரம் பொதுவாக பாதுகாப்பான அளவில் இருப்ப தாகக் குறிப்பிட்ட வாரியம், ஜோகூ ரின் சுற்றுச்சூழல் துறையுடன் தொடர்பில் இருப்பதாகவும் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால் தெரிவிக்கப்படும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தது.
வெடிப்புச் சம்பவத்துக்கு எரி வாயுத் தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணம் என்று ஊடகச் செய்தி களை மேற்கோள்காட்டி ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு களை சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்துக்கப்பால் அமைந்திருக்கும் பாசிர் கூடாங் பகுதிவரை உணர முடிந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. சம்பவ இடத்தில் எடுத் ததாக இணையத்தில் வலம்வந்த காணொளியில் மேலெழும்பும் கரும்புகையுடன் சுழன்று எரியும் பெருந்தீ காணப்பட்டது.
இவ்வாண்டிறுதியில் வர்த்தகச் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சோதனை செய்யப்படு வதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!