இந்தோனீசியத் தேர்தல் மோசடி குறித்த விசாரணை: மலேசியா சென்ற அதிகாரிகள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் புதன்கிழமை நடைபெற உள்ள அதிபர், சட்டமன்றத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தோனீசியர் களின் வாக்களிப்பு தொடங்கப்படு வதற்கு சில நாட்களுக்கு முன்பா கவே மலேசியா வாழ் இந்தோனீ சியர்கள் ஆயிரக்கணக்கானோர் வாக்களித்தது தொடர்பான விசாரணைக்காக இந்தோனீசியா வின் தேர்தல் ஆணைய அதி காரிகள் நேற்று மலேசியாவின் சிலாங்கூருக்குச் சென்றனர்.
மலேசியாவில் இருக்கும் சுமார் 1.1 மில்லியன் இந்தோனீசிய வாக்காளர்களுக்கு நாளை வாக்க ளிக்க அனுமதி அளிக்கப்பட் டிருந்தது.
கடை வீடு ஒன்றை அதிகாரி கள் சோதனையிடுவதைக் காட் டும் காணொளி இணையத்தில் வலம்வந்தது.
திரு ஜோக்கோ விடோடோ, அவரது துணை அதிபர் வேட்பா ளர் மரூஃப் அமின், அவரது ஆதரவு பெற்ற சில  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு  ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளைக் கொண்ட பல பைகள் மலேசியாவின் சிலாங் கூரில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் தகவல்களை ஆணையம் சேக ரித்து வருகிறது என ‘கோம் பாஸ்.காம்’ எனும் இணையப் பக்கம் தெரிவித்தது.
பிரச்சினையில் சம்பந்தப்பட்ட வாக்குச் சீட்டுகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் கருவி களுடன் இந்தோனீசிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று காலை மலேசியாவுக்குச் சென் றனர். 
‘பவல்சு’ எனப்படும் இந்தோ னீசியத் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பின் முன்னிலையில் வாக்குச்சீட்டுகளின் உண்மைத் தன்மை நேர்மையாகச் சோதிக்கப் படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்தச் சோதனைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு எதிர்த்தரப்பு கோரிக்கை விடுத் துள்ள வேளையில், விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் ‘பவல்சு’ நடவடிக்கை எடுக்கலாம் என திரு ஜோக்கோ கூறியுள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon