கோலாலம்பூர்: ஈஸ்ட்கோஸ்ட் ரயில் இணைப்புத் (இசிஆர்எல்) திட்டத்தை மீண்டும் நடப்புக்குக் கொண்டுவருவதற்கான துணை ஒப்பந்தம் ஒன்றில் மலேசியா ரயில் லிங்க், சைனா கம்யூனி கேஷன்ஸ் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி ஆகியவை கையொப்ப மிட்டுள்ளன. மலேசியா, சீனா இடையிலும், இரு நிறுவனங்களுக்கு இடை யேயும் பல மாதங்களாக நடை பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் பெய்ஜிங் கில் கையொப்பமாகி இருப்பதாக மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சு நேற்று தெரிவித்தது. 'இசிஆர்எல்' திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான கட்டுமானச் செலவு தற்போது 44 பில்லியன் மலேசிய ரிங்கிட் (S$14.5 பில்லியன்) ஆகக் குறைந்திருப்ப தாகவும் அது அறிவித்தது. இதற்கு 65.5 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாகும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. பொறியியல், பொருட்கள் வாங்குதல், கட்டுமானம், நிறுவு தல் போன்ற அம்சங்கள் இந்தத் துணை ஒப்பந்தத்தில் உள்ளடக் கப்பட்டு இருப்பதாக அது குறிப் பிட்டது. மேம்படுத்தப்பட்ட ஒப்பந்தத் தின் மற்ற விவரங்கள் அடுத்த திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது. மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் 'ஒரே வர்த்தகப் பொருளியல் மேம்பாட்டுத் தடத்' தின் ஓர் அங்கமான இந்தத் திட்டம், மலேசிய அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிந்த மாபெரும் உள்கட்டமைப்பு வசதி களை உள்ளடக்கிய திட்டங்களில் ஒன்று. பிரதமர் சீனாவுக்குச் செல்வதற்கு முன்பாக நேற்று பெய்ஜிங்கிற்குச் சென்ற பிரதமரின் சிறப்புப் பேராளரான டயிம் ஸைனுதின், சீனாவுடனான இந்தத் திட்டத்தை இறுதிப்படுத் தினார். இரட்டைத் தடங்களைக் கொண்ட இந்த ரயில் பாதையின் நீளம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த 688 கி.மீட்டரிலிருந்து 40 கி.மீ. குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீட்டருக்கான செலவு 98 மி. மலேசிய ரிங்கிட்டிலிருந்து 68 மி. மலேசிய ரிங்கிட்டாகக் குறைக் கப்பட்டுள்ளது. முன்பு குறிப்பிடப் பட்டிருந்த கோம்பாக் ரயில் நிலையம் நீக்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட்கோஸ்ட் ரயில் இணைப்புத் திட்ட துணை ஒப்பந்தம்
2 mins read

