'இளஞ்சிவப்பு வைரம் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டது'

'இளஞ்சிவப்பு வைரம் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டது'

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனை வியான ரோஸ்மா மன்சூர் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (S$31.2 மி.) மதிப்புள்ள இளஞ் சிவப்பு வைரத்தை வாங்கவில்லை எனும் அவரது கருத்துக்கு போலிஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இளஞ்சிவப்பு வைரம் வாங்கி யது தொடர்பில் ரோஸ்மாவிற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மலேசியத் துணை நிதி அமைச்சர் அமிருதின் ஹம்ஸா அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் அந்த வைரமானது 1எம்டிபி பணத்தைக் கொண்டு நியூயார்க்கில் உள்ள நகை வியா பாரியிடமிருந்து வாங்கப்பட்டதற் கான ஆதாரம் தங்கள் வசம் உள்ளதாக பணமளிப்பு குற்ற விசாரணைப் புலனாய்வுக் குழுத் தலைவரான கலீல் அஸ்லான் சிக் நேற்று தெரிவித்தார். "அந்த இளஞ்சிவப்பு வைர மானது போலிசார் நடத்திய அதி ரடி சோதனையின்போது கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும், அதனை வாங்கியதற்கான சான் றுகள் தெளிவாக உள்ளன," என அவர் கூறினார்.