ரந்தாவ் இடைத்தேர்தலிலும் தோல்வி; பக்கத்தான் ஹரப்பானுக்கு நெருக்கடி

ரந்தாவ் இடைத்தேர்தலிலும் தோல்வி; பக்கத்தான் ஹரப்பானுக்கு நெருக்கடி

2 mins read

மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பான், ரந்தாவ் இடைத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவி யுள்ளது. இது, இவ்வாண்டு பக்கத்தான் ஹரப்பான் சந்தித் திருக்கும் 3வது தோல்வியாகும். 2004ஆம் ஆண்டிலிருந்து ரந்தாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தேசிய முன்ன ணியின் வேட்பாளரான 62 வயது முஹமட் ஹசான் இடைத் தேர்தல் வெற்றி மூலம் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ரந்தாவ் தொகுதியின் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததால் இங்கு இடைத் தேர்தல் நடத்தப் பட்டது. நான்கு முனைப் போட்டியில் திரு முஹமட் ஹசான் சுமார் 4,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அன்வர் இப்ராஹின் கேஅடிலான் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமி, 60, தோல்வியடைந்தார். சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்ட இதர இருவரும் தோல்வியடைந்தனர். கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரதமர் மகாதீர் தலை காட்டினாலும் ரந்தாவ் தேர்தலில் அவர் பிர சாரத்துக்கு வரவில்லை. கெஅடிலான் கட்சித் தலை வரான அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிரசாரக் குழுவே கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தது. ஆனால் இதில் கெஅடிலான் கட்சிக்கு தோல்வியே ஏற்பட்டுள் ளது. இந்த நிலையில் அன்வார் இப்ராஹிம் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். ரந்தாவ் தோல்வி மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே நினை வூட்டுகிறது என்று அவர் குறிப் பிட்டார். மக்களின் அக்கறைக்குரிய விவகாரங்களான பொருளியல், வாழ்க்கைச் செலவினம் போன்ற வற்றில் பக்கத்தான் ஹரப்பான் தொடர்ந்து போதுமான அளவில் ஏற்புடைய வகையில் கவனம் செலுத்துவது அவசியம் என்று திரு அன்வார் இப்ராஹிம் தெரி வித்துள்ளார்.