17,000 அடி உயரத்தில் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம்

17,000 அடி உயரத்தில் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம்

1 mins read
b2ef2ac2-2982-4fda-8f20-ff8f6ff1f49e
-

லாஸ் ஏஞ்சலிஸ்: உலகின் மிகப் பெரிய விமானம் அதன் முதல் பயணத்தை அமெரிக்காவில் தொடங்கி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரரான பால் ஆலென் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாகத் தொடங்கியவர் பால் ஆலென். வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப் பெரிய விமானம் ஒன்றை தயாரிக்க அவர் தீர்மானித்தார். இதன் விளைவாக அவர் 2011ஆம் ஆண்டில் புதிய நிறுவனத்தை அவர் தொடங்கினார். விமான கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக விமானத்தை பறக்க விடுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம் சனிக்கிழமை கலிஃபோர்னியாவில் 17,000 அடி உயரத்தில் பறந்து சாதனை படைத்தது.