இந்தோனீசியாவில் வரும் புதன்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தோனீசியர்கள் நேற்று வாக்களித்தனர். சிங்கப்பூரில் 200,000 இந்தோனீசியர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 127,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஏராளமான இந்தோனீசியர்கள் நேற்று சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசிய தூதரகத்தில் வாக்களித்ததாகத் தகவல்கள் கூறின. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தோனீசியர்கள் கடந்த திங்கள் கிழமையிலிருந்து வாக்களித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசியர்கள் வாக்களிப்பு
1 mins read
-

