நஜிப் மீதான விசாரணை தொடர்கிறது

நஜிப் மீதான விசாரணை தொடர்கிறது

1 mins read
f6942a2b-98b6-49be-a4fe-0cc96b30839a
வழக்கு விசாரணை முடிந்து மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் காட்சி. படம்: இபிஏ -

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி நிதி மோசடி வழக்கு தொடர்பில் நேற்று உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக முன்னிலையானார். இதன் தொடர்பில் நிதி அமைச்சுக்குச் சொந்தமான 'எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் வங்கி ஆவணங் களும் நஜிப்பின் வங்கி ஆவணங் களும் 2015ஆம் ஆண்டு நடந்த சோதனையின்போது 'எம்பேங்க்' கிளையிலிருந்து கைப்பற்றப்பட்ட தாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. பண மோசடிக்கு எதிரான சட் டம் தொடர்பில் 'பேங்க் நெகாரா மலேசியா' நிர்வாகி அஸிசுல் அட்சானி மேலும் மூன்று அதிகாரி களுடன் இணைந்து இந்தச் சோதனையை நடத்தியதாகக் கூறப்பட்டது. 1எம்டிபி நிறுவனத் தின் துணை நிறுவனமான 'எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்' நிறு வனத்திடமிருந்து கிட்டத்தட்ட 42 மி. மலேசிய ரிங்கிட் கொள்ளை யடிக்கப்பட்டதன் தொடர்பிலான நஜிப்பின் நிதி மோசடி வழக்கில் இரண்டாவது சாட்சியாக நேற்று அஸிசுல் அழைக்கப்பட்டார். பண மோசடி விசாரணை தொடர்பில் வங்கியில் சோதனை மேற்கொண்டபோது நஜிப் வங்கிக் கணக்குகள் தொடர்பான நான்கு கோப்புகளும் 'எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் பற்றிய நான்கு கோப்புகளும் ஆதாரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் குறித்து நேற்று நீதிமன்றத்தில் அஸிசுல் உறுதியளித்தார். இவ்வழக்கு தொடர்பில் நஜிப் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர் நோக்குகிறார்.