மகாதீர்: கடன் சிக்கலைக் குறைக்க புதிய ஒப்பந்தம் உதவும்

கோலாலம்பூர்: ஈஸ்ட்கோஸ்ட் ரயில் இணைப்புத் (இசிஆர்எல்) திட்டத் திற்கான செலவை சீனா குறைத் துக்கொண்டுள்ளதுடன் மலேசியா வில் அமையவிருக்கும் கிட்டத் தட்ட 640 கி.மீட்டர் நீளமுடைய இந்த ரயில் பாதைத் திட்டத்தைப் பாதிக்குப் பாதி என்ற கூட்டு முயற்சியில் மலேசியாவுடன் சீனா இணைந்து செயல்படுத்தும்.
இது கோலாலம்பூரின் கடன் நெருக்கடிக்கு ஆறுதலாக அமை யும் என்று நேற்று நடந்த செய் தியாளர் கூட்டத்தின்போது பிரத மர் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.
இதற்கு முன்பு 65.5 பில்லியன் மலேசிய ரிங்கிட் இத்திட்டத்திற் காக செலவாகும் என்று கூறப்பட்டு இருந்தது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நிர்வாகத்தின் கீழ் இந்த இசிஆர்எல் ஒப்பந்தம் கையொப்ப மானபோது 'சீனக் கடன் சிக்கல்' உருவானது என்றும் தற்போது கட்டுமானச் செலவுகள் 44 பில்லியன் மலேசிய ரிங்கிட்டாகக் (S$14.5 பி.) குறைக்கப்பட்டுள்ள தால் சிக்கலைக் குறைக்க அது உதவும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.
இரட்டைத் தடங்கள் கொண்ட இந்த ரயில் பாதைத் திட்டத்திற்காக வரி செலுத்துவோர் கிட்டத்தட்ட 81 பில்லியன் மலேசிய ரிங்கிட்டைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்தின் கூற்றைச் சுட்டிக்காட்டித் தொடர்ந்து பேசினார். "இது நமக்குக் குறிப் பிடத்தக்க சேமிப்பைத் தருவதுடன் இதற்கான வட்டியும் ஒரு கணிச மான அளவு குறையும்," என்றார் பிரதமர். மேம்படுத்தப்பட்ட ஒப்பந் தத்தின்படி இக்கூட்டு முயற்சியில் ஏற்படும் இழப்புகளை இருநாட்டு நிறுவனங்களும் சரிசமமாகப் பகிர்ந்துகொண்டாலும் இதில் விளையும் லாபங்கள் 80-20 என மலேசியாவுக்குச் சாதகமாகப் பங் கிடப்படும் என்று அதிகாரபூர்வமான தகவல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!