சீனாவுக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 7.5 டன்கள் எடையுள்ள யானைத் தந்தங்களை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீனாவிலுள்ள ஆறு மாநிலங்களில் சுங்கத்துறை அதிகாரிகளும் போலிசாரும் கடந்த மாதம் நடத்திய சோதனையின்போது அவர்கள் அந்த தந்தங்களைப் பறிமுதல் செய்ததாக சீனாவின் சுங்கத்துறை தெரிவித்தது.
யானைத் தந்தங்களின் விற்பனையை சீனா 2017ஆம் ஆண்டில் தடை செய்தது. அதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டில் யானைத் தந்த ஏற்றுமதிகள் தடை செய்யப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளில் ஆக அதிகமான எண்ணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் இவை என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் தொடர்பில் 20 சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

