நஜிப், முன்னாள் அமைச்சர்களை கடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறை

நஜிப், முன்னாள் அமைச்சர்களை கடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறை

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன் னாள் பிரதமர் நஜிப் ரசாக்கையும் மற்ற அமைச்சர்கள் சிலரையும் கடத்த திட்ட மிட்டதற்காக மூன்று ஆடவர் களுக்குச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளதாக மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. இரு முன்னாள் மலேசிய ராணுவ வீரர்களான நூர் அஸ்மி ஜெய்லா னிக்கும் முகம்மது யுஸ்ரிக்கும் தலா எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரு வருக்கும் 32 வயதாகிறது. இந்தோனீசியரான 31 வயது அலி சைஃபுதீனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பரான அவர் மலேசிய நிரந்தரவாச தகுதியைப் பெற்றவர். வன்முறையைத் தூண்டும் சதி திட்டங்களைத் தீட்டியதாகக் கூறி அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப் பட்டதையடுத்து மேல்முறையீட்டு நீதி மன்றம் இந்தத் தண்டனையை விதித் தது. அவர்கள் கைது செய்யப்பட்ட தேதி யிலிருந்து இந்தத் தண்டனை தொடங் கியதாக நீதிபதிகள் குழு உத்தர விட்டது. இம்மூவரும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றத்தில் முன்வைக் கப்பட்ட ஆதாரங்களின்படி, இந்த மூவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளியின் மகன் ஒருவரிடம் நஜிப்பைக் கடத்தும் முயற் சிக்காக பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய தாகக் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் துணைப் பிரதமர் அகமது சாஹிட் ஹமிடி, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷா முதீன் ஹுசைன் மற்றும் முன்னாள் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகி யோரும் இந்தக் குற்றவாளிகளின் இலக்காக இருந்தனர். ஐஎஸ் அமைப்பில் இருந்த முன்னாள் போராளியின் மகனான அபு தாவுட் முராட் ஹலிமுதீன் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டிருந்தது. அவரது தந்தையான முராட் ஹாலிமுதீன் ஹசானுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. ஆயினும், 2017ஆம் ஆண்டு இதய கோளாற்றால் அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.