சியாங் மாய்: தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் 'ஸிப்லைன்' எனும் சாகச விளை யாட்டில் ஈடுபட்ட 25 வயது கனடிய சுற்றுப் பயணி ஒருவர் பாதுகாப்புக் கொக்கி உடைந்து கீழே விழுந்து மாண்டார். ஸ்பென்சர் சார்ல்ஸ் என்ற அந்த ஆடவர் கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரி வித்தன. கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தில் 'ஸிப்லைன்' விளை யாட்டைத் தொடங்கி சிறிது தூரம் சென்றதும் அந்த ஆடவரைத் தாங்கியிருந்த பாதுகாப்புக் கொக்கி உடைந்ததாக அதி காரிகள் தெரிவித்தனர். 'ஸிப்லைன்' விளையாட்டிற்கு எட்டுப் பாதுகாப்புக் கம்பிவடங்கள் இருக்க வேண்டும். ஆனால் அந்த வேளையில் மூன்று பாதுகாப்புக் கம்பிவடங்கள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சாகச விளையாட்டில் ஈடுபடு வதற்கு ஒருவர் 125 கிலோ கிராமுக்கும் குறைவான எடை உடையவராக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆடவரின் எடை 125 கிலோ கிராம் எனக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் 'ஸிப் லைன்' விளையாட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சியாங் மாயில் 'ஸிப் லைன்' விளையாட்டில் விபரீதம் நிகழ்ந் திருப்பது இது முதன்முறை அல்ல. 2016ல் இந்த விளையாட்டில் ஈடுபட்ட இஸ்ரேலிய சுற்றுப்பயணிகள் மூவர் காயமடைந்ததை அடுத்து பாதுகாப்புச் சோதனைக்காக இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.
சாகச விளையாட்டில் விபரீதம்: சுற்றுப்பயணி மரணம்
1 mins read
கனடிய சுற்றுப்பயணியான 25 வயது ஸ்பென்சர் சார்ல்ஸ் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த இந்தக் காட்டுப் பகுதியில் காணப்படும் தாய்லாந்து அதிகாரிகள். படம்: இணையம் -

