தட்டம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிப்பு

ஜெனிவா: இவ்வாண்டின் முதல் காலாண்டில் உலகெங்கும் தட்டம் மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடு கையில் ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
தொற்றிக்கொள்ளும் தன்மை யுடைய தட்டம்மையைத் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும். ஆனால் தடுப் பூசி போட்டுக்கொள்வோரின் விகிதம் குறைந்து வருவதை உலகச் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
உலகளவில் 10ல் ஒரு சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்படுவதாக அது கூறியது. அப்படியென்றால், தெரிவிக்கப்படாத இன்னும் ஏராளமான தட்டம்மை சம்பவங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தட்டம்மை பாதிப்பால் சிறு வர்கள் பார்வை, செவிப்புலன் இழக்கும் ஆபத்து உள்ளது.
சில நேரங்களில், நுரையீரல், மூளை உள்ளிட்ட உறுப்புகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டால் உயி ருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.
இவ்வாண்டு தொடங்கி இது வரை 170 நாடுகளில் 112,163 தட்டம்மை தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 163 நாடு களில் 28,124 சம்பவங்கள் பதி வாகின.
உலகம் முழுவதும் பாதிப்பு காணப்பட்டாலும் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட கண்டம் ஆப்பி ரிக்கா. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்புநோக்க, அங்கு தட்டம்மை சம்பவங்கள் 700 விழுக்காடு அதிகரித்துள்ளன.
உலகின் மற்ற பகுதிகளைவிட ஆப்பிரிக்காவில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் விகிதம் குறை வாக இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஜார்ஜியா, பிலிப்பீன்ஸ், உக்ரேன், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் தட்டம்மை பாதிப்புக்கு இலக்காகி உள்ளன.
அந்த நாடுகளில் ஒரு மில்லி யனுக்குப் பல்லாயிரம் பேர் என்ற விகிதத்தில் தட்டம்மை தொற்றி இருப்பதாகத் தெரிவிக்கப்படு கிறது.
பிரேசில், பாகிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளிலும் ஏராளமான சிறுவர்கள் இப்பாதிப்பால் மாண்ட தாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!