இந்தோனீசிய அதிபர் தேர்தல்: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

ஜகார்த்தா: உலகிலேயே ஆக அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தோனீசியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது ஆகப் பெரிய ஜனநாயக நாடான இந்தோ னீசியாவின் சில பகுதிகளில் பதற்றநிலை அதிகரித்துள்ள வேளையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 272,880 போலிஸ் அதி காரிகளும் 68,854 ராணுவப் படை யினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அது தவிர, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாதுகாவல் அதிகா ரிகள் வாக்குப்பதிவு மையங் களுக்கு வெளியே குவிக்கப்பட்டு உள்ளனர்.
மின்சக்தி ஆலைகள், விமான நிலையங்கள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் பாது காப்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
நாட்டின் 34 மாநிலங்களில் ஜகார்த்தா, மத்திய சுலாவேசி, பாப்புவா, மேற்கு ஜாவா உள்ளிட்ட வற்றில் அதிக பதற்றம் நிலவும் பகுதிகளாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக பிரிகேடியர் ஜெனரல் டெடி பிரசெத்யோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
இந்தோனீசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இம்முறை அதிபர் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் இன்று ஒரே நாளில் நடத்தப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்பதை 192 மில்லியனுக்கு அதிகமான வாக்காளர்கள் இன்று நிர்ணயிக்க உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவாக மொத்தம் 245,000 வேட்பாளர்கள் நாடெங்கிலும் களம் இறங்கி உள்ளனர். வாக்காளர்கள் வாக்கு களைப் பதிவு செய்வதற்காக ஏறத் தாழ 810,000 வாக்குப்பதிவு மையங்கள் ஆறு மணி நேரத் திற்குத் திறந்திருக்கும்.
அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான ஜோக்கோ விடோடோ அடுத்த ஆட்சிக்குத் தயாராகும் வேளையில், அவருக்கு எதிராக முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுபியாண்டோ களம் இறங்குகிறார்.

இந்தோனீசியாவின் பண்டா அச்சேயில் நேற்று தேர்தல் ஆணைய ஊழியர்கள் வாக்குப் பெட்டிகளைத் தயார்ப்படுத்தினர். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!