ஐந்தாண்டுகளில் 'நோட்ர டேம்' புதிய தோற்றம்

1 mins read
383af352-863e-44c1-bcde-8a8dd17c8cfb
-

'நோட்ர டேம்' தேவாலயம் மேலும் எழிலான தோற்றத்துடன் ஐந்து ஆண்டுகளில் சீரமைக்கப்படும் என பிரஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் உறுதி கூறியுள்ளார். 850 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த இந்தத் தேவாலயம் திங்கட்கிழமை தீப்பிடித்ததில் அதன் கூரையும் கோபுரமும் சேதமடைந்தன.

"முன்பிருந்ததைவிட எழிலான தோற்றத்துடன் தேவாலயத்தை மறுசீரமைப்போம். இதை ஐந்து ஆண்டுகளில் முடிப்பதே என் விருப்பம். எங்களால் இது முடியும்," என்று திரு மக்ரோன் தொலைக்காட்சி நேரலை உரை ஒன்றில் தெரிவித்தார்.

பிளபுபட்டுள்ள நாட்டை இந்தச் சம்பவம் ஒன்றிணைத்திருப்பதாகவும் திரு மக்ரோன் கூறினார்.