சிட்னி: ஆஸ்திரேலியாவில் இதுவரை நடக்காத அதிசயமாக மான் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார் என்று ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்தது. விக்டோரியாவில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வரும் மானுக்கு 47 வயது நபர் உணவு கொடுக்க சென்றபோது மான் அவரை தாக்கியது. கணவரைக் காப்பாற்ற அங்கு ஓடி வந்த பெண் ணையும் மான் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பெண் உயிருக்குப் போராடி வருகிறார். அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 2000-2013 இடையே விலங்குகளால் கொல்லப்பட்டவர்களில் இதுவரை மான் தொடர்பான சம்பவங்கள் நடந்ததில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மெல்பர்னின் வடகிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவம் நடைபெற்ற இடத்தில் தாக்கிய மான் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறினர். ஆறு ஆண்டுகளாக தம்பதியர் அந்த மானை வளர்த்து வந்தததாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் மான் தாக்கி ஒருவர் பலி
1 mins read

