சோல்: தென்கொரியாவில் ஆடவர் ஒருவர், குடியிருப்புப் பகுதியில் தீ மூட்டி பலரைக் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மாண்டனர். 13 பேர் காயம் அடைந்தனர். ஜின்ஜு நகரில் தனது அடுக்கு மாடி வீட்டை 42 வயது ஆடவர் தீயிட்டுக் கொளுத்தினார். பின்னர் அங்கிருந்த குடியிருப்பாளர் களை ஓட ஓட விரட்டி அவன் கத்தியால் குத்தினான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் 12 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் மாண்டனர். போலிசார் அவனை மடக்கி கைது செய்தனர். விசாரணையில் சம்பளம் பாக்கி இருந்ததால் ஆத்திரத்தில் அவ்வாறு நடந்துகொண்டதாக சந்தேக நபர் கூறியுள்ளான். காவல்துறை விசாரணை தொடர் கிறது.
கத்தியால் குத்திய ஆடவர்; ஐவர் மரணம்
1 mins read
தலைநகர் சோலிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அடுக்குமாடி கட்டடத்தில் தீயில் கருகிக் கிடக்கும் வீட்டின் சன்னல். படம்: இபிஏ -

