பிரதமர் மகாதீர்: வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை

சைபர்ஜெயா: அண்மையில் நடை பெற்ற ரந்தாவ் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஏற் பட்ட தோல்வியால் அரசாங்கத் துக்கு பாதிப்பில்லை என்று பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.
“பெரும்பாலான அரசாங்கங் களுக்கு இடைத்தேர்தலில் பெரிய அளவில் ஆதரவு கிடைக்காது. காரணம், ஆளும் அரசாங்கத்தில் மாற்றம் இருக்காது என்பது வாக் காளர்களுக்கே தெரியும்,” என்று அவர் கூறினார்.
ரந்தாவ் தொகுதியில் தோல்வி அடைந்தாலும் நெகிரி செம்பி லானில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், “இடைத்தேர்தலில் என்ன நடந்தாலும், வெற்றியோ, தோல்வியோ மத்தியில் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்,” என்றார்.
நிதிக் கட்டுப்பாடு காரணமாக கடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களுக்காக பலவற்றை செய்ய பக்கத்தான் ஹரப்பான் அர சாங்கம் விரும்புகிறது. ஆனால் தற்போதுள்ள நிதி நிலைமையால்  திட்டங்களை நிறைவேற்ற முடிய வில்லை. 
“என்னை நம்புங்கள். நம்மிடம் போதுமான பணமில்லை. ஏற் கெனவே திருடப்பட்டுவிட்டது. இதுதான் தற்போதைய தலையாய பிரச்சினை,” என்று பிரதமர் மகாதீர் சொன்னார்.
அடுத்த ஆறு மாதங்களில் பக்கத்தான் ஹரப்பானின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று டயிம் சைனூதின் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது குறித்து பிரதமர் மகாதீரிடம் வினவப்பட்டது.
பக்கத்தான் ஹரப்பான் குறிப் பாக பொருளியல் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியதும் மக்களின் ஆதரவு அரசாங்கத் துக்கு திரும்பிவிடும் என்று டயிம் அறிக்கையில் கூறியிருந்தார். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon