'நோட்ர டாம் இன்னும் அழகாகக் கட்டப்படும்'

'நோட்ர டாம் இன்னும் அழகாகக் கட்டப்படும்'

1 mins read
34b679d5-03ff-410e-a74d-cb4611ffb6ed
தீ விபத்துக்குப் பிறகு தேவாலயத்தின் உள்தோற்றம். படம்: ஏஎஃப்பி -

பாரிஸ்: நோட்ர டாம் தேவாலயம் முன்னைவிட இன்னமும் அழ காக காட்சியளிக்கும் வகையில் புதுப்பிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் சூளுரைத்துள்ளார். சீரமைப்புப் பணிகள் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த திங்கட்கிழமை மூண்ட தீயில் 850 ஆண்டு பழமையான நோட்ர டாம் தேவால யத்தின் கூரையும் கோபுரமும் முற்றிலும் சேதமடைந்தன. சில நிமிடங்களில் முழு தேவாலயமும் தீக்கு இரையாகி யிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தேவாலயம் இன்னும் அழகாகக் கட்டப்படும் என்று அதிபர் மெக்ரோன் கூறி யுள்ளார். ஆனால் மறுநிர்மாணப் பணிகள் நிறைவடைய பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே தீ விபத்து குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரித்து வரு கின்றனர். பாரிஸ் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ரெமி ஹெய்ட்ஸ், "வேண்டுமென்றே தீ மூட்டியதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இதை ஒரு விபத்தாக வகைப்படுத்தியிருக்கி றோம்," என்றார்.