அதிபர் தேர்தல்: முன்னணியில் ஜோக்கோ விடோடோ

இந்தோனீசியாவில் இரண்டா வது முறையாக அதிபர் தேர் தலில் போட்டியிட்ட திரு ஜோக்கோ விடோடோ முன்ன ணியில் இருப்பதாக நேற்று வெளியான அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்மை எதிர்த்துப் போட்டி யிட்ட முன்னாள் ராணுவத் தள பதி பிரபோவோ சுபியாண்டோ வைவிட எட்டு முதல் 10 விழுக் காடு வாக்குகள் அதிகமாக பெற்று திரு ஜோக்கோ முன்ன ணியில் இருப்பதாக அதிகாரபூர் வமற்ற வாக்கு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.
அதிபர் தேர்தலின் அதிகார பூர்வ முடிவு வெளியாக இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.
இந்த நிலையில், ஜகார்த் தாவைத் தளமாகக் கொண்டு உள்ள 'போல்ட்ரேக்கிங்' எனும் நிறுவனம் நடத்திய ஆரம்பகட்ட மாதிரி வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் ஜோக்கோ வுக்கு 55 விழுக்காடு வாக்கு களும் திரு பிரபோவோவிற்கு 46 விழுக்காடு வாக்குகளும் கிடைத் திருப்பதாக தெரிய வந்து உள்ளது.
மாறாக 'இந்தோ பேரோமீட்டர்' எனும் நிறுவனம் நடத்திய வாக்கு எண்ணிக்கையில் திரு ஜோக்கோ குறைவான அளவில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திரு பிரபோவோ தான் முன்னணியில் இருப்பதாக அவரது குழுவினர் கூறுகின்றனர். நாட்டின் 34 மாநிலங்களில் உள்ள 5,475 வாக்குச்சாவடிகளில் திரு பிரபோவோவே வலுவான முன் னணி வகிப்பதைத் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக பிரசார இயக்குநர் சுஜியோனோ செய்தியாளர்களிடம் கூறினார்.
உலகின் மூன்றாவது ஆகப் பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியாவில் இம்முறை அதிபர் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நேற்று ஒரே நாளில் நடைபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!