மகாதீருக்கு 'டைம்ஸ்' சஞ்சிகை கௌரவம்

“எதிரிகளுக்கு அச்சமூட்டும் வயதான வீரர்” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதை டைம்ஸ் சஞ்சிகை வர்ணித்துள்ளது. இவ்வாண்டில் அதிக செல்வாக்கு உள்ள 100 பேரில் ஒருவராக டாக்டர் மகாதீரை அந்த சஞ்சிகை குறிப்பிட்டது.

1981ஆம் ஆண்டு மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பதவியேற்ற டாக்டர் மகாதீர், 2003ஆம் ஆண்டில் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு பொதுத்தேர்தலின்போது, தமது அரசாங்கத்தில் துணைப்பிரதமராக இருந்த நஜிப் ரசாக்கை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 93 வயதில் மறுபடியும் பிரதமரானார் டாக்டர் மகாதீர்.

“1எம்டிபி நிறுவனத்திலிருந்து பல மில்லியன் டாலர் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் திரு நஜிப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக டாக்டர் மகாதீர் தமது ஓய்விலிருந்து வெளியேறி மீண்டும் அரசியலுக்குள் புகுந்தார். அதிகாரத்தைத் தட்டிக் கேட்பதற்கு வயது தடையல்ல என்பதை இது காட்டுகிறது,” 

அதிக செல்வாக்கு உள்ள 100 பேர் பட்டியலில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.