விடோடோவின் வெற்றியை முன்னுரைக்கும் கணிப்புகள்

விடோடோவின் வெற்றியை முன்னுரைக்கும் கணிப்புகள்

1 mins read
ef6eaab6-a863-416a-a376-4cdab405a1f0
-

இந்தோனீசியாவின் அதிபராக விடோடோ தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப்போவதாகச் சில அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் முன்னுரைத்ததை அடுத்து அந்நாட்டின் நிதிச்சந்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

தேர்தலில் திரு விடோடோ 54 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றிருப்பதாக ஆரம்பக்கட்ட கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. திரு விடோடோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுப்பியாண்டோவைவிட எட்டு விழுக்காடு அதிக வாக்குகள் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும்.