வட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்

போயிங், ஏர்பஸ் ஆகிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜப்பானைச் சேர்ந்த ‘மிட்சுபி‌ஷி ரீஜனல் ஜெட்’ நிறுவனம் செயல்படவிருக்கிறது. 

1960களிலிருந்து முதல் விமானத் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மிட்சுபி‌ஷி நிறுவனம் கடந்த மாதம் அமெரிக்காவின் வா‌ஷிங்டன் மாநிலத்தில் விமானப் பயணங்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கத் தொடங்கியது. 160 இருக்கைகள் வரையிலான விமானங்களுக்கான உற்பத்தி செயல்பாடுகளை விற்க போட்டி நிறுவனங்கள் முற்படும் வேளையில் மிட்சுபி‌ஷி நிறுவனம் இந்தச் சந்தையை ஆழம்பார்க்கிறது.

போயிங்கின் 737, ஏர்பஸ்ஸின் ஏ320 ஆகிய விமானங்களைக் காட்டிலும் மிட்சுபி‌ஷி நிறுவனம் தயாரிக்கும் விமானங்கள் அளவில் சிறியதாக இருக்கும். குறைவான இருக்கைகளை அவை இருக்கும். 

வட்டார அளவில் செயல்படும் பயண விமானங்களுக்கான தேவை குறையப்போவதில்லை என்று மிட்சுபி‌ஷியின் தலைவர் ஹிசாக்காசு மிசுடானி தெரிவித்திருக்கிறார்.