சுடச் சுடச் செய்திகள்

வடகொரியா மீண்டும்  ஆயுதச் சோதனை

வடகொரியா நவீன ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்­ள­தாக அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
அணுவாயுதக் களைவு குறித்து வடகொரியாவை அனைத்துலக நாடுகள் நெருக்கி வரும் வேளை­யில் அந்நாடு இந்தச் சோதனையை நடத்தியுள்ளது அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் மேலும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
அணுவாயுதக் களைவு குறித்து இனி அமெரிக்காவுடன் ஒரு போதும் பேசப்போவதில்லை. எனவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ அணு வாயுதப் பேச்சுவார்த்தையில் தலை­யிட வேண்டாம் என்றும் வட­ கொரியா கூறி­யுள்­ளது. 
அதே வேளை­­யில் பேச்சுவார்த்­தையை மிகவும் கவனமாகவும் முதிர்ச்சியுட­னும் கையாளக்கூடிய ஒருவருக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்குப் பாதிப்­பு ஏற்படுத்தும் வகையிலான போக்கை அமெரிக்கா கைவிட வில்லை­யெனில் கொரிய தீபகற்பத் தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் எளிதில் கணிக்க முடி யாது என்று வடகொரிய மூத்த அதிகாரி குவோன் ஜோங் குன் தெரிவித்தார். 
வடகொரியா தற்போது மேற் கொண்ட ஆயுதச் சோதனை அமெரிக்க வடகொரிய உச்சநிலை மாநாட்டுக்குப் பின் நடத்தப்பட்ட முதல் சோதனையாகும்.
வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைகள் தொடர்பான தடை கள் இன்னமும் நடப்பில் உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon