இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டம் வெடிக்கும் அபாயம்; எச்சரிக்கை

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணியில் இருப் பதாகக் கூறப்படுகிறது.
அதிகாரபூர்வமற்ற மாதிரி வாக்கு எண்ணிக்கையில் அவர் முன்னணி வகிக்கிறார்.
ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுபியாண் டோவின் ஆதரவாளர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
இதையடுத்து எந்த நேரத்திலும் ஆர்ப்பாட்டம் வெடிக்கலாம் என் பதால் காவல்துறையினரின்  எச் சரிக்கை வெளியாகியுள்ளது.
தேசிய போலிஸ் தலைவர் டிட்டோ கர்னவின், அமைதியாக நடந்துள்ள தேர்தலுக்கு ஆர்ப்பாட் டங்கள் மூலம் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது என்றார்.
“இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
“பொதுமக்களின் பாது காப்புக்கு மிரட்டல் ஏற்படுத் தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் காரணமானவர் களை கைது செய்வோம்,” என்று அவர் எச்சரித்துள்ளார். 
இந்த நிலையில் நேற்று தலைந கர் ஜகார்த்தாவின் தெருக்கள் வழக்கம்போல அமைதியாகக் காணப்பட்டன. 
முஸ்லிம்கள் பெரும்பான் மையினர் வசிக்கும் இந்தோனீ சியாவில் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் பிரதிநிதி களை தேர்ந் தெடுக்க புதன்கிழமை வாக்களிப்பு நடைபெற்றது. 
அதிகாரபூர்வ முடிவு வெளியாக ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படும் வேளையில் மாதிரி வாக்கு எண் ணிக்கையில் ஜோக்கோ 11% புள்ளிகள் பெற்று முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலு வலக பேச்சாளர் ஒருவர் கூறி னார்.