பிரதமர் மகாதீர்: மலேசியா பாதுகாப்பான நாடு

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, மலே சியா பாதுகாப்பான நாடு என்றும் மலேசியாவுக்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கு பயண ஆலோ சனை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
“மலேசியாவுக்கு மக்கள் தாராளமாக வரலாம், மலேசியா வுக்கு எதிராக பயண ஆலோ சனை எதுவும் விடுக்கத் தேவை யில்லை. மதிய உணவோ, இரவு விருந்தோ தயங்காமல் வரலாம் என்பதை உறுதியுடன் கூறுவேன். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் சில நாடுகளில் வழிபாடு செய்யும்போதே கொன்று விடு வார்கள்,” என்று அமெரிக்க மலேசியர் வர்த்தக தொழிற்சபை நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மகாதீர் சொன்னார்.
“ஒன்றிரண்டு பயங்கர வாதிகள் பிடிபட்டுள்ளார்கள். மற்றபடி மலேசியா பாதுகாப்பான நாடு,” என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசாங்கம் மலேசி யாவை ‘கே’ எனக் குறிப்பிடும் பயண ஆலோசனை பட்டியலில் சேர்த்தது. கிழக்கு சாபாவின் சில பகுதிகளில் ஆட்களைக் கடத்தும் அபாயம் இருப்பதால் மலேசியாவுக்கு செல்லும் அமெரிக்க பயணிகளுக்கு அந் நாட்டு அரசு ஆலோசனை வழங்கியிருந்தது. இதனையறிந்த மலேசிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்க தூதரான கமலா ‌ஷிரின் லக் திரையை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில்  மேலும் பேசிய டாக்டர் மகாதீர், ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்க பயணிகள் இங்கு அதிகம் வருவதில்லை. அமெ ரிக்க விமானங்களோ நிறுவனங் களோ மலேசியாவுக்கு வருவ தில்லை. சிங்கப்பூருக்கு வரு கிறார்கள், ஆனால் மலேசியா வுக்கு வருவதில்லை. இது எனக்கு எப்போதுமே ஆச்சரிய மாக இருக்கும். நாங்களும் நல்ல வர்கள்தான்,” என்றார்.