லிஸ்பன்: போர்ச்சுக்கலில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தில் 29 ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் இறந்தனர். மடிராவில் மாலை 6.30 மணி அளவில் பேருந்து விபத்துக் குள்ளானது. சாலையிலிருந்து விலகி ஓடிய பேருந்து பலமுறை உருண்டு, புரண்டு ஓடிய பின்னர் பள்ளத்தாக்கில் இருந்த வீட்டின் முன்பு மோதி நின்றது. "மடிராவிலிருந்து பயங்கரமான செய்தி வந்துள்ளது," என்று ஜெர் மன் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். "எங்களுடைய ஆழ்ந்த அனு தாபங்களைத் தெரிவிக்கிறோம். தற்போது காயம் அடைந்தவர்கள் பற்றியே அதிகம் கவலைப்படு கிறோம்," என்றார் அவர். விபத்தில் இறந்தவர்களில் 17 பெண்களும் அடங்குவர் என்றும் 21 பேர் காயம் அடைந்தனர் என்றும் விபத்து நிகழ்ந்த சான்டா குருசின் மேயரான ஃபிலிப் சோயுசா தெரிவித்தார். சம்பவம் நடந்த சிறிது நேரத் தில் மருத்துவமனையில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. தொலைக்காட்சியில் பேசிய அதிபர் மார்செலோ ரிபேலோ டிசூசா, இந்தத் துயரமான சமயத்தில் மக்கள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்று வலி யுறுத்தினார். இதற்கிடையே ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க் கல், போர்ச்சுகீசிய அரசாங்கத் துடன் தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார். பேருந்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 50 பயணிகள் இருந்த னர்.
பேருந்து விபத்தில் 20 பேர்பலி
1 mins read
விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து பயணிகள் வெளியேற தீ அணைப்பாளர்கள் உதவி செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

