வடஅயர்லாந்தில் செய்தியாளர் சுட்டுக்கொலை 

லண்டன்: வடஅயர்லாந்தின் லண்டன்டெரி நகரில் நடந்த கலவரத்தின்போது ஒரு பெண் சுட்டுக்கொல்லப்பட்டதாக  போலி சார் கூறினர்.  
 அதனை பயங்கரவாதச் சம்பவமாக போலிசார் வகைப் படுத்தியுள்ளனர். அது தொடர்பில் விசாரணை தொடர்வதாக போலிசார் கூறினர். அப்பகுதியில் உள்ள சில வீடுகளை போலிசார் சோதனை செய்ததைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது. 
 அந்தக் கலவரத்தின்போது சிலர் போலிஸ் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தகவல்கள் கூறின.  பெண் செய்தியாளரான லைரா மெக்கீயை சுட்டுக்கொன்றது யார் என்பது கண்டறியப்படவில்லை.