புத்ராஜெயா: சிலாங்கூரில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனை ஒட்டி இம்மாதம் 24ஆம் தேதி முதல் 86 மணி நேரத்திற்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் நான்கு மில்லியன் பேர் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2 நாட்களுக்குத் தேவையான தண்ணீரை சேமிக்குமாறு மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
'சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும்'
1 mins read

