மகாதீர்: பண்டார் மலேசியா திட்டம் தொடரும்

மகாதீர்: பண்டார் மலேசியா திட்டம் தொடரும்

1 mins read

கோலாலம்பூர்: ஜோகூரில் பாதியில் நிறுத்தப்பட்ட பண்டார் மலேசியா திட்டம் தொடரும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார். அத்திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் அதன் நிலையை தற்போது மாற்றிக்கொண்டுள்ள தாகவும் அவர் சொன்னார். அது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள தாகவும் டாக்டர் மகாதீர் கூறினார். அத்திட்டம் தேசிய முன்னணி ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதற்கான மொத்த செலவு 200 பில்லியன் ரிங்கிட் (S$ 65.4 பில்லியன்). அத்திட்டத்திற்காக 2015ஆம் ஆண்டில் நிதி அமைச்சு 7.4 பில்லியன் ரிங்கிட் பெறுமான 60 விழுக்காட்டுப் பங்குகளை இஸ்கந்தார் வாட்டர்ஃபிரன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கும் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கும் விற்றது. இருப்பினும் அந்த ஒப்பந்தம் 2017ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.