சுடச் சுடச் செய்திகள்

டிரம்ப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் நெருக்குதல் 

வா‌ஷிங்டன்: 2016ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் நெருக்குதல் கொடுத்து வரு கின்றனர். திரு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரணை செய்து வந்த சிறப்பு ஆலோசகர்  ராபர்ட் முல்லர், நாடாளுமன்ற அவையில் சாட்சிய மளிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறி யுள்ளனர்.  முல்லரின் 400 பக்க அறிக்கை காங்கிரஸ் அவையில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப் பட்டது.  ரஷ்யத் தலையீட்டில் திரு டிரம்ப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார். இந்த அறிக்கை வெளியிடப்பட்டது தங்களுக்கான முழு வெற்றி என்று திரு டிரம்ப்பின் சட்ட ஆலோசனைக் குழு தெரி வித்துள்ளது.  திரு முல்லரை நீக்க திரு டிரம்ப் முயற்சி செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon