நாயின் பிடியிலிருந்து மகனைக் காப்பாற்றிய ஆஸ்திரேலிய தந்தை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை குவீன்ஸ்லாந்து கடலோரப் பகுதிக்கு அருகே உள்ள ஃபிரேசர் சுற்றுலாத் தீவுக்கு சென்றிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கூடாரத்தில் பெற்றோருடன் தங்கியிருந்த 14 மாதக் குழந்தையை டிங்கோ வகையைச் சேர்ந்த காட்டு நாய் ஒன்று இழுத்துச் சென்றது. குழந்தையின் அழுகுரல் கேட்ட தந்தை வெளியில் ஓடிவந்து பார்த்தபோது ஒரு நாய் தன் மகனை இழுத்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் விரைவாக ஓடிச் சென்று நாயின் பிடியிலிருந்து தன் மகனைக் காப்பாற்றினார். ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு கழுத்திலும் உடம்பிலும் ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.