இலங்கை: பாதுகாப்பு கருதி பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடல்

இலங்கை: பாதுகாப்பு கருதி பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடல்

1 mins read

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் புதன்கிழமை வரை மூடப்படும் என்று இலங்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்குத் தொடர்ந்து விடுதிகளில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.