இலங்கை: 10 நாட்களுக்கு முன்பே இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரிக்கை

இலங்கை: 10 நாட்களுக்கு முன்பே இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரிக்கை

1 mins read

இலங்கையில் நேற்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இலங்கையில் தாக்குதல் நடத்தக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத மிரட்டல் குறித்து கடந்த 11ஆம் தேதியே போலிஸ் படைத் தலைவர் ஜெயசுந்தரா, உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்தியத் தூதரகம் போன்ற இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த என்டிஜே என்படும் இலங்கையில் உள்ள தீவிரவாத முஸ்லிம் குழு திட்டமிட்டிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக உளவுத் துறை தெரிவித்திருந்தது.